வாக்காளர்களுக்கான போக்குவரத்து குறித்து நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது வாக்காளர்களுக்கான போக்குவரத்து வசதி போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை விசாரிக்க ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப். 23 அன்று தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற பலர், போதுமான பஸ் வசதி இல்லாததால் ஓட்டு போட முடியவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் இந்த மனுவை தாக்கல் செய்து, இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். சவுந்தர் மற்றும் பி. பி. பாலாஜி அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையத்துடன் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.