நியூயார்க்: ஈரான் தொடர்பான போர் தொடங்கியதற்குப் பிறகு, அமெரிக்காவில் பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவில் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குக் காரணமாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பாதையாகக் கருதப்படும் ஈரான் தொடர்புடைய ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதியிலேயே சிக்கித் தவிக்கின்றன.
விநியோகம் பாதிக்கப்பட்டதால் பல நாடுகளில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் உயர்ந்தது. அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் விலை சுமார் ரூ.422 ஆக உயர்ந்துள்ளது; ஒரு கேலன் என்பது 3.785 லிட்டர்.
இந்த விலை, போர் தொடங்குவதற்கு முன் இருந்த நிலையை விட 50 சதவீதத்திற்கும் மேல் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. விலை உயர்வின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஜார்ஜியா, கென்டக்கி போன்ற சில மாநிலங்கள் தற்காலிகமாக பெட்ரோல் வரியை நீக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை எடுத்துள்ளன.





