சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பு ஏற்பாடு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றிக்குப் பிறகு, முதல்வருக்கு வழங்கப்படும் அளவிலான பாதுகாப்பு, குறிப்பாக சிறப்பு கான்வாய் பாதுகாப்பு, விஜய்க்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவலின்படி, பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமான பாதுகாப்பின்றி அவர் தனியாக தனது காரில் புறப்பட்டதாகவும், இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விஜய் கவர்னர் மாளிகைக்கு சென்றபோது முதல்வருக்கான சிறப்பு கான்வாய் பாதுகாப்பில் சென்றதாகவும், பதவி ஏற்காமல் இத்தகைய பாதுகாப்பு வழங்குவது குறித்து கேள்விகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியிலேயே பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கலாம் என்றும், விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் மீண்டும் கான்வாய் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.