த.வெ.க (தமிழக வெற்றி கழகம்) தலைவர் விஜயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் கவுன்சிலர் டில்லிபாபு டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதாகவும், இது தமிழக மக்கள் எதிர்பார்த்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றியின் பின்னணியில் விஜய் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்க்கு எதிராக பா.ஜ.க. நெருக்கடி கொடுத்து வருவதாகவும், அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அவருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விஜய்க்கும் அவருடன் கை கோர்த்து இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என டில்லிபாபு கோரிக்கை வைத்துள்ளார்.





