காங்கிரஸுடன் திமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், லோக்சபாவில் திமுக எம்பிக்களுக்கான இருக்கை அமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், தற்போதைய இருக்கை அமைப்பின்படி திமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்பிக்களுக்கு அருகில் அமர்ந்திருப்பதாகவும், தற்போதைய சூழலில் அதையே தொடர்ந்து கடைபிடிப்பது திமுக உறுப்பினர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, திமுக எம்பிக்களுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அவர் கோரியுள்ளார். இதன் மூலம் அவையில் திமுக உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாறிய அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு இருக்கை திட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கடிதத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.





