தமிழக பிளஸ் 2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) அரங்கில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வெழுதிய மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும் முடிவுகளை அறியலாம்.
இணையத்தில் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய தளங்களில் பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து முடிவுகளை பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் 78452 52525 என்ற எண்ணிற்கு “Hi” என அனுப்பி, துறை பெயர் வந்ததும் Directorate of Government Examinations – Plus Two என்பதைத் தேர்வு செய்து, தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் முடிவு கிடைக்கும். சந்தேகங்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் 14417, 104, 14416 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





