சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட உதயநிதியின் இல்லத்தில் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பில், சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திடீர் மாற்றம் ஏற்பட்டது.
‘குறிஞ்சி இல்லம்’ எனப்படும் அந்த வீட்டில், இரவு-பகல் என மூன்று ஷிப்டுகளாக மொத்தம் 24 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்கான போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டதாகவும், அங்கு பணியில் இருந்தவர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றும், பதவி ஏற்கும் நிகழ்ச்சி தள்ளிப்போனதாகவும் தகவல் வெளியானது. மேலும் ஆட்சி அமைப்பது குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே பேச்சு நடப்பதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, திருப்பி அனுப்பப்பட்ட போலீசார் நள்ளிரவில் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.
தற்போது வழக்கம்போலவே அந்த இல்லத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





