விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மே 8 அன்று மாலை 5 மணிக்கு இணைய வழியில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகே யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இன்றைய ஆலோசனை முடிந்த பிறகு, கட்சியின் முடிவு நாளை காலை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், திமுக–அதிமுக கூட்டணி தொடர்பான விஷயங்களிலும் நிர்வாகிகளின் கருத்தை கேட்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார். ‘தவெக’க்கு ஆதரவா இல்லையா என்பது குறித்து விசிக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.