சென்னை: அமமுக எம்எல்ஏ காமராஜ் விஜய்க்கு ஆதரவு கடிதம் எழுதிக் கையெழுத்திடும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோவை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன், “அமமுக எம்எல்ஏ காமராஜை காணவில்லை” என கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து புகார் மனுவையும் அளித்ததாக கூறப்பட்டது.
பின்னர் காமராஜ் மீண்டும் வந்த நிலையில், தினகரனுடன் இணைந்து பேட்டி அளித்தார். நள்ளிரவில் ராஜ்பவனுக்கு சென்று, தனது பெயரில் விஜய் கட்சியினர் வழங்கியதாக கூறப்பட்ட கடிதம் போலியானது என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சூழலில், தவெக தரப்பு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் காமராஜ் மகிழ்ச்சியுடன் ஆதரவு கடிதத்தை எழுதிக் கையெழுத்திடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.





