சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக எம்எல்ஏ காமராஜர் தொடர்பானதாக கூறப்படும் ஆதரவு கடிதம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் விஜய் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
நிருபர்களிடம் பேசிய தினகரன், காமராஜர் காரில் அமர்ந்தபடியே ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடுவது போல வெளியான வீடியோவை யார் எடுத்தது, யார் பரப்பியது என கேள்வி எழுப்பினார். அந்த வீடியோ போலியானது என்றும், AI மூலம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், “ஒரிஜினல்” ஆதரவு கடிதம் எங்கே என கேட்டு, வீடியோவும் கடிதமும் உண்மையானவை என்றால் அவற்றின் ஒரிஜினலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். விஜய் கவர்னரிடம் அளித்த அனைத்து ஆதரவு கடிதங்களையும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அர்லேக்கர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த போலி கடிதம் விவகாரத்தில் போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த தினகரன், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்றும், தன்னை மிரட்ட முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். எம்எல்ஏவை மிரட்டி ‘குதிரை பேரம்’ மூலம் ஆதரவு உருவாக்க திட்டமிட்டதாகவும் அவர் கூறினார்.
ஜனநாயகத்தில் ஆதரவை நேரில் கேட்டு பெற வேண்டும்; போலி கடிதங்கள் மூலம் ஆதரவை உருவாக்கக் கூடாது என தினகரன் தெரிவித்தார்.





