சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; ஜனநாயகத்தின் மிக முக்கியப் பொறுப்பும் கூட என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டதாக குறிப்பிட்டார். மேலும், முந்தைய சட்டமன்றத்தை கலைக்கும் வகையில் கவர்னர் ஆணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்தலில் வென்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து மாநில நலனுக்கான பணிகளை முன்னெடுக்க புதிய அரசு விரைவில் அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசு அமைப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க, அரசியல் சட்டப்படி புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை கவர்னர் உடனடியாக தொடங்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொண்டார்.





