தவெகவுக்கு விசிக ஆதரவு
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தவெகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக தொகுதிகளை வென்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை எட்டாததால் தவெக மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரியது. 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் முதலில் ஆதரவு அளித்ததாகவும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு விசிகவும் தவெகவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4), விசிக (2) ஆகிய ஆதரவுடன் பெரும்பான்மை எண்ணிக்கையான 118-ஐ தவெக எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி ஆதரவு உறுதியான நிலையில், தாம் வென்ற 2 தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து விஜய் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
அந்த இடைத்தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எம்எல்ஏ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், விஜய் அமைச்சரவையில் அமைச்சராக சேர்க்கப்படுவார் என்றும், மேலும் ஒரு விசிக எம்எல்ஏக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.





