இன்று (மே 9) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) தெரிவித்துள்ளது.
வெளியிட்ட அறிக்கையில், இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் தாக்கத்தால் மே 13க்கு அருகில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 9 அன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் அதி கனமழை பெய்யலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை (மே 10) திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். மே 11 அன்று ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மே 12 அன்று நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 13 அன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே 14 அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதே நாளில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மே 15 அன்று ஈரோடு, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்; கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.





