தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண்ணிக்கையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 107 ஆகிறது; ஆட்சி அமைக்க 118 ஆதரவு தேவைப்பட்டது.
இந்த இடைவெளியை நிரப்ப, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை தவெக கேட்டது. தலா 2 எம்எல்ஏக்களை கொண்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தவெகுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இதற்கு முன்பே காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களும் தவெகுக்கு ஆதரவு அளிப்பார்கள் என தெரிவித்திருந்தது. இதன் மூலம் தவெக 118 எம்எல்ஏ ஆதரவை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் முன் தொண்டர்கள் உற்சாகமாக கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கட்சிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.





