சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை குறித்து, “அவர் தொடும் அனைத்தும் அரசியல் பேரழிவாக மாறுகிறது” என்று பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த விமர்சனம், லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அருகில் திமுக எம்.பி.க்கள் அமர்வது பொருத்தமில்லை எனக் கூறி, திமுக எம்.பி. கனிமொழி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இருக்கை மாற்றம் கோரி கடிதம் எழுதிய பின்னணியில் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் அமித் மால்வியா, ராகுல் காந்தி காங்கிரசை மட்டுமல்ல, முழு ‘இண்டி’ கூட்டணியையும் முடிவுக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
மேலும், ராகுலின் ஒவ்வொரு தேர்தல் முயற்சியும், பிரசாரமும், தலையீடும் கூட்டணியின் வீழ்ச்சியை வேகப்படுத்துகிறது என்றும், அவர் தொடும் விஷயங்கள் பலனாகாமல் அரசியல் பின்னடைவாகவே மாறுகின்றன என்றும் அவர் கூறினார்.





