தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருகின்றன.

தருமபுரம் ஆதீனம், அறநெறி தவறாத செங்கோல் ஆட்சியை வழங்க இறையருள் துணை நிற்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன், முதல்வர் பணி விஜய்க்கு கடினமானதல்ல என்றும், தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ள நிலையில் அவர்கள் விரும்பியபடி நல்லன நிகழ வேண்டும் என்றும் கூறினார்.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள்நலன் ஆகிய மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் ஆட்சியாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து அதிபர் அனுரா திசநாயகே, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து, அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என கூறினார். மேலும், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இந்த புதிய அத்தியாயம் முன்னேற்றம், கருணை மற்றும் புரிதலை உருவாக்கும் ஆற்றலை கொண்டு வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.