சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டியில், லக்னோ அணி அதிரடி தொடக்கத்தை வெளிப்படுத்தியது.
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு இங்லிஷ் மற்றும் மிட்சல் மார்ஷ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மார்ஷ் மெதுவாக ஆடியபோதும், மறுமுனையில் இங்லிஷ் சென்னை பந்துவீச்சை கடுமையாக தாக்கினார்.
பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக ரன்களை குவித்த இங்லிஷ், வெறும் 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
10 பந்துகளில் 10 ரன் எடுத்திருந்த மார்ஷ், கம்போஜ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவில் லக்னோ 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.





