இலவச மின்சார திட்டம் தொடர்பாக தமிழக அரசு நிபந்தனைகளுடன் அரசாணை (GO) வெளியிட்டுள்ளது.

அரசாணை படி, இரண்டு மாத மின் கட்டண காலத்தில் 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் இணைப்புகளுக்கு மட்டும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

அதே காலகட்டத்தில் பயன்பாடு 500 யூனிட்டை கடந்தால், இலவச மின்சாரம் 100 யூனிட்களாக கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள மானியத்துடன் கூடுதலாக இந்த திட்டத்தால் ரூ.1,730 கோடி செலவாகும் என்றும், முன்பிருந்த 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என்றும் அரசு கூறியுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்ற உடனே முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரம் அனைவருக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான பின்னணியில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.