தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்ட விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஐபிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விஜயின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் விழாவில் இருந்தனர். விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்தனர்.
திமுக மற்றும் அதிமுக சார்பில் முக்கிய தலைவர்கள் வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் கவனம் பெற்ற மற்றொரு அம்சமாக, விஜய் கோட்-சூட் அணிந்து பதவியேற்றார். இதுவரை தமிழகத்தில் பல முன்னாள் முதல்வர்கள் பொதுநிகழ்வுகளில் வேட்டி-சட்டை அணிவதே வழக்கமாக இருந்த நிலையில், இன்று அந்த மரபில் மாற்றம் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
தவெக தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் இந்த நிகழ்ச்சி தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.





