சென்னையில், விஜய்யுடன் சேர்ந்து பதவியேற்க உள்ள அமைச்சர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி, புதிய அமைச்சரவைக்கான துறை ஒதுக்கீடுகள் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த பட்டியலின்படி, பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை பொறுப்பை விஜய் ஏற்கலாம். பொதுப்பணித்துறை செங்கோட்டையனுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை என்.ஆனந்துக்கும், மின்சாரத்துறை சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கும் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், ஆதி திராவிடர் நலத்துறை ராஜ்மோகனுக்கும், சிறுபான்மை நலத்துறை முஸ்தபாவுக்கும், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அருண்ராஜுக்கும், பள்ளி கல்வித்துறை வெங்கட் ரமணனுக்கும் ஒதுக்கப்படலாம் என பட்டியல் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், விஜய்யின் நண்பரும் தூத்துக்குடி எம்எல்ஏவுமான ஸ்ரீநாத், சத்யபாமா மற்றும் காரைக்குடி எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.