தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று சத்தியப்பிரமாணம் செய்தார்.
விஜயுடன் சேர்த்து மேலும் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவை பட்டியலில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பதவியேற்பு விழாவில் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் “ஆண்டவன் மேல் ஆணையிட்டு” என உறுதிமொழி எடுத்தனர். ஆனால் ஆதவ் அர்ஜூனா மட்டும் ஆண்டவனை குறிப்பிடாமல் “உளமாற” என்று கூறி உறுதிமொழி எடுத்தார்.
புதிய நிர்வாகத்தின் அறிவிப்புடன் அமைச்சரவை பட்டியல் மற்றும் உறுதிமொழி தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டன.





