தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையை அமைக்க அரசாணையில் முதல்வர் விஜய் நேற்று கையெழுத்திட்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வராக விஜய் பதவி ஏற்றார். அதன் பின்னர், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மின்சாரத் திட்டத்தின் கீழ், இரண்டு மாத பில்லிங் காலத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
பெண்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான காவலர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை அமைக்கப்படும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான புகார்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் 65 இடங்களில் போதைப் பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும். இதில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள் மற்றும் ஒன்பது மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் இடம்பெறும்.





