நாட்டு மக்களிடம் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் 7 கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவர், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் இந்த 7 அம்சங்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், ஒராண்டுக்கு தங்கம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பெட்ரோல்-டீசல் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ரசாயன உரம் சார்ந்திருப்பதை குறைத்து இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றது.
இதோடு வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக சுதேசி பொருட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், ஒராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாவை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.





