சென்னை: பண்ருட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மோகன், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் படத்தை வணங்கி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.
உறுதிமொழியை முடித்த உடனே உணர்ச்சி வசப்பட்ட அவர் கண்ணீர் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மீண்டும் ஜெயலலிதா படத்தை வணங்கி, “அம்மா காப்பாத்துங்க” எனக் கூறி ஆசீர்வாதம் வேண்டினார்.
இந்த நிகழ்வு அ.தி.மு.க. உறுப்பினர்களை மட்டுமல்லாமல், பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் நெகிழ வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன் பதவியேற்க வந்த போது, கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி எங்கு இருக்கிறார் என சில நிமிடங்கள் தேடிய மோகன், அவரைக் கண்டதும் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தார்.





