சென்னையில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட இருந்த எத்தியாட் ஏர்வேஸ் விமானத்தின் இடது பக்க இறக்கை பகுதியில் திடீரென தீ ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 280 பயணிகளுடன் அந்த விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, இடது இறக்கை பகுதியில் தீப்பற்றியது. இதை கவனித்த விமானி உடனடியாக பயணிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டு, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.