முதல்வர் விஜய் திங்கள்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு சென்றார். அங்கு கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் படத்துக்கு விஜய் மரியாதை செலுத்தினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பூங்கொத்து வழங்கி வரவேற்று, அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றார்.
இந்த சந்திப்பின்போது மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்எல்ஏ ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும், “விஜய்க்கு காமராஜர் ஒரு சகாப்தம்” என்ற தலைப்பிலான நூல் விஜய்க்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதற்கு முன், முதல்வர் விஜய் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கும் சென்று, அக்கட்சித் தலைவர் காதர் மொகிதீன் வரவேற்ற நிலையில், ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.





