சென்னை: நாட்டை வலுப்படுத்த கூட்டு பொறுப்புணர்வு அவசியம் என தமிழக கவர்னர் ஆர்.என். அர்லேக்கர் தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய சவாலான சூழலில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அறிக்கையில், இயன்றவரை வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், சுதேசி பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்வதையும் ஊக்குவித்தார்.
தேவையற்ற தங்க கொள்முதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கூட்டு பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட செயல்பாடுகள் இந்தியாவின் நிலைத்தன்மையை வலுப்படுத்தி, சுயசார்பு இந்தியாவை நோக்கிய முன்னேற்றத்தை வேகப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.





