தமிழ்நாடு முதல்வர் விஜய் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதை நடிகர் கமல் ஹாசன் வரவேற்றுள்ளார். இது மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எடுத்த நடவடிக்கை என அவர் கூறினார்.

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்க் குடும்பங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு என்றும், பதவியேற்ற உடனே இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளதாகவும் கமல் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மது விற்பனை என்பது அரசின் பணியாக இருக்கக் கூடாது; மது பயன்பாட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்றும், அந்த நிலையை நோக்கி தமிழக அரசு நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

717 கடைகள் மூடல் என்பது தொடக்கம் மட்டுமே; இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும், நடவடிக்கை தொடர வேண்டும் என்று கூறி, முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.