பிரதமர் நரேந்திர மோடி மே 15ல் 5 நாடுகளுக்கான அரசு முறை சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) புதுடில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் தகவலின்படி, முதற்கட்டமாக மே 15ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல்நஹ்யானை சந்தித்து பேச உள்ளார்.

இரண்டாம் கட்டமாக, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் அழைப்பின் பேரில் மே 15 முதல் 17 வரை நெதர்லாந்து செல்கிறார்.

மூன்றாம் கட்டமாக மே 17 மற்றும் 18 தேதிகளில் ஸ்வீடன் செல்லும் அவர், அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனை சந்திப்பார்.

நான்காம் கட்டமாக இந்தியா–நார்டிக் உச்சி மாநாடு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மே 18 முதல் 19 வரை நார்வேக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் பின்னர் மே 19 மற்றும் 20 தேதிகளில் இத்தாலி செல்ல உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.