தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினி பதிலளிக்காமல், கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
மே 12 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ரஜினியிடம் விஜய் முதல்வராக பதவி ஏற்றது குறித்து கருத்து கேட்டனர்.
அதற்கு ரஜினி வாய்திறந்து எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் கும்பிட்டு வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அதிக தொகுதிகளை கைப்பற்றியபோது விஜய்க்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.





