சென்னை: தமிழகத்தில் நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக பல ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிதித்துறைச் செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் பொறுப்பேற்கிறார். சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை முதன்மைச் செயலாளராக சுவர்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் உதயசந்திரன் மற்றும் அமுதா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.