தமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி. (Inspector General) ஆக ஐ.பி.எஸ். அதிகாரி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்ததையடுத்து, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான மாற்றங்கள் வெளியான நிலையில், இன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தேர்தல் கமிஷன் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. அவினாஷ்குமார் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அஸ்ரா கார்க் உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.





