சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பது பெருமை என நடிகர் கமல் ஹாசன், முதல்வர் விஜயை பாராட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தத் துறையிலிருந்தும் அரசியலுக்கு வரலாம் என்றும், விஜயை திரைப்பட நடிகராக மட்டும் பார்க்கக் கூடாது என்றும் கூறினார்.
மேலும், 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதை வரவேற்ற கமல், இது நீண்ட நாட்களாக பேசப்பட்ட விஷயம் என்றும், தற்போது நடைமுறைக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்.
விஜய்க்கு சினிமாவைத் தாண்டி பிற பொறுப்புகள் உள்ளன என்றும், இந்த நடவடிக்கை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.





