புதுடில்லி: மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்கள் மக்களிடம் தடையின்றி சென்று சேர ‘இரட்டை இன்ஜின் அரசு’ உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தகவலின்படி, மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைச்சரவை கூட்டம் நடத்தி, மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனுடன், பி.எம்.-கிசான், பி.எம்.-ஸ்ரீ, விஸ்வகர்மா உள்ளிட்ட பிற மத்திய திட்டங்களையும் நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முடிவை சமூக வலைதள பதிவில் வரவேற்ற பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் மூலம் மேற்கு வங்க மக்களுக்கு தரமான மற்றும் மலிவு விலையில் மருத்துவ சேவை உறுதி செய்யப்படும் என்றும், இது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் என்றும் குறிப்பிட்டார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.