அமெரிக்காவுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் “தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள் மற்றும் முட்டாள்கள்” மட்டுமே என அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக ராணுவ ரீதியாகச் சிறப்பாகச் செயல்படுகிறது என கூறப்படும் செய்திகள் போலியானவை எனத் தெரிவித்தார். இப்படியான செய்திகளைப் பரப்புவது தேசத்துரோகச் செயல் என்றும், அது எதிரிக்குத் துணை போவதாகவும், ஈரானுக்கு வீண் நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், நாட்டுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்கர்கள் இருப்பதாகக் கூறி அவர்களை “கோழைத்தனமானவர்கள்” எனவும் டிரம்ப் சாடினார். ஈரான் கடற்படையில் 159 கப்பல்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் தற்போது கடலின் ஆழத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதோடு, ஈரானின் விமானப்படை அழிந்துவிட்டது, தொழில்நுட்பங்கள் கைவிட்டுப் போய்விட்டன, தலைவர்கள் உயிருடன் இல்லை, நாடு பெரிய பொருளாதாரப் பேரழிவைச் சந்திக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, அமெரிக்காவுக்கு எதிராகக் குரல் எழுப்புவது “தோல்வியாளர்கள், நன்றியற்றவர்கள், முட்டாள்கள்” மட்டுமே என அவர் மீண்டும் கூறினார்.