பா.ஜ.க. தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல். சந்தோஷ், சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சி இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டிய தேவை இருப்பதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், மேலிடத் தலைவர்களின் கவனம் தென் மாநிலங்களின் பக்கம் திரும்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக்கழக அரசின் பல செயல்பாடுகள் தி.மு.க. நடைமுறைகளைப் பின்பற்றுவது போல இருப்பதாகவும், இது பா.ஜ.க.க்கு வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்றும் அவர் கூறியதாக தகவல்.
இதனால், ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மக்கள் பிரச்னைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் சந்தோஷ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.





