சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், அந்தமான்-நிக்கோபார் தீவு பகுதிகளில் மே 16ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (மே 14) கோவை, தேனி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை (மே 15) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மே 16ல் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளது. மேலும் மே 17 முதல் 19 வரை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் இடி-மின்னல் ஏற்படக்கூடும்; மே 18 மற்றும் 19 தேதிகளில் தேனி மாவட்டத்திலும் இதேபோன்ற நிலை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.