திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி காலியானதாக தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். முதல்வராக பொறுப்பேற்கும் முன்பாக, அவர் மே 10 அன்று திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது தொகுதி காலி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விதிப்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து தேர்தல் கமிஷன் விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில், லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே தொகுதியில் தோல்வியை சந்தித்த திமுகவும் தொகுதியை கைப்பற்ற தீவிரமாக முயல்வதால், இம்முறை கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.