மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்கை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததாக செய்தி தெரிவிக்கிறது.
இரு தலைவர்களும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர், வரி விதிப்பு தொடர்பான மோதல்கள் உள்ளிட்ட பொருளாதார விவகாரங்களை விவாதித்தனர்.
ஈரான் தொடர்பான பதற்றத்தை தணிக்கவும், துாதரக ரீதியிலான உடன்பாடு ஏற்படவும் சீனா தன் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம், எரிசக்தி தட்டுப்பாடு போன்ற சூழலில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
ஜின்பிங், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனாவுக்கு வந்த டிரம்பை வரவேற்றார். உலகம் பெரிய மாற்றங்களையும் நிலையற்ற சர்வதேச சூழலையும் எதிர்கொள்கிறது எனக் கூறிய அவர், வேறுபாடுகளை விட பொதுநலன்களை முன்னிலைப்படுத்தி இரு நாடுகளும் போட்டியாளர்களாக அல்ல, கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என்றார்.
டிரம்ப், இருநாட்டு உறவு மேலும் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முன்னணி அமெரிக்க தொழில் அதிபர்கள் தன்னுடன் வந்துள்ளதாகவும், பரஸ்பர அடிப்படையில் வர்த்தக மற்றும் தொழில் ஒத்துழைப்பை வளர்க்க அவர்கள் ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.





