அதிமுக கொறடா நியமனம் தொடர்பான விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், கட்சியினர் அளித்த மனுக்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் சட்டமன்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
அதிமுகவின் இரண்டு தரப்புகள் தனித்தனியாக தன்னை அணுகி மனுக்கள் அளித்துள்ளதாக அவர் கூறினார். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் பின்னணியில் இந்த விவகாரம் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.
ஒரு தரப்பில் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) இருப்பதாகவும், மற்றொரு தரப்பில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பும் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைப் பெற முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுக்கள் அளித்து இரண்டு நாட்களே ஆன நிலையில், அவை ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். பரிசீலனை முடிந்த பின் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





