சென்னை: அ.தி.மு.க. தொடர்பான நடப்பு விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என தமிழக பா.ஜ. அணிக்கு கட்சியின் மேலிடம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

பா.ஜ. வட்டாரங்கள் கூறுவதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு உருவான அரசியல் நிகழ்வுகள் குறித்து தமிழக பா.ஜ. மூத்த நிர்வாகிகளிடம் கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல். சந்தோஷ் கேட்டறிந்தார்.

அந்த ஆலோசனைகளில், அ.தி.மு.க.வில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு குழுக்களாக செயல்படுகிறது என்ற தகவல்கள் உள்ளிட்ட உள்ளக நிலவரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என மேலிடம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ. நிர்வாகிகள் பொதுவெளியில் பேசாமல் இருக்கவே இந்த அறிவுறுத்தல் என வட்டாரங்கள் தெரிவித்தன.