ஐந்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மே 15 அன்று அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானை சந்தித்தார்.

அன்றே டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, அமீரகம் வந்தடைந்தபோது உற்சாக வரவேற்பு பெற்றார்.

சந்திப்பின்போது இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அமீரக அதிபர் முன்னிலையில் எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும், அமீரகம் அளித்த அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறினார்.