ஈரான் தொடர்பான போர் காரணமாக பாகிஸ்தான் உட்பட பிராந்திய பொருளாதாரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் அவர் பேசியபோது, பாகிஸ்தான் அணுசக்தி நாடாக உயர்ந்ததுபோலவே அதே அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் நாட்டை பொருளாதார சக்தியாகவும் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அணுசக்தி திறன் என்பது நாட்டின் பாதுகாப்புக்கான சொத்து; அது தாக்குதலுக்கானது அல்ல என்றும் அவர் கூறினார். இதன் காரணமாகவே பாகிஸ்தான் ஒரு பொறுப்பான அணுசக்தி நாடாக உலக நாடுகள் அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேற்காசியப் போரால் பிராந்திய நாடுகளின் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதில் பாகிஸ்தானும் பாதிப்பை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.