சென்னை: நடிகர்கள் அஜித், விஜய் இருவருக்கும் முதல்வராகும் வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டது விஜய்தான் என்றும் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவில் சிறப்பு அதிகாரியாக தன்னை நியமித்ததாகவும், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். பழநி சென்று மொட்டை அடித்து திரும்பும் போது நியமனம் ரத்து செய்யப்பட்ட தகவல் தெரிய வந்ததாகவும், அது எதிர்பாராத நிகழ்வாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கவே பொறுப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும், இதனால் தனக்கு வருத்தம் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், தன் பொறுப்புக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பில்லை; அரசியல் அனுபவத்தின் அடிப்படையில்தான் தன்னை தேர்வு செய்ததாகவும், விஜய்க்கு ஜோதிடத்தில் பெரிய நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டியில் ஜெயலலிதா, அத்வானி உள்ளிட்டோருடன் இருந்த தொடர்புகள் குறித்து பேசினார். அஜித் பொதுவாழ்க்கைக்கு வர விருப்பமின்றி ஒதுங்கி நிற்பதாகவும், விஜய் அரசியலுக்கு வர விரும்பி வந்ததால் முதல்வராகவும் ஆனார் என்றும் அவர் கூறினார்.
மேலும், விஜயின் எதிர்காலம் குறித்து பெரிய அளவில் கணிப்புகள் கூறியதுடன், இபிஎஸ் மற்றும் அதிமுகவின் எதிர்காலம் பற்றியும் தன் மதிப்பீடுகளை பகிர்ந்தார்.





