புதுடில்லி: சபரிமலை தொடர்பான வழக்கில் மே 14 அன்று உச்ச நீதிமன்றம் 16 நாட்களாக நடந்த விசாரணையை நிறைவு செய்து, தீர்ப்பை ஒத்திவைத்தது.

கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் உள்ளிட்டும், பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பான மனுக்களையும், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

இறுதி நாள் விசாரணையில், நாட்டில் மதத்தை நிலைநிறுத்த மதப் பிரிவுகளும் அமைப்புகளும் அவசியம் என நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், சிலர் கோவில்களுக்குச் செல்லாமலோ அல்லது வீட்டில் தனிப்பட்ட வழிபாட்டுத் தலம் இல்லாமலோ இருக்கலாம்; இருப்பினும் அது ஒரு வாழ்க்கை முறை என்பதால் தங்களை ஹிந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை பின்னர் அறிவிக்குமாறு அமர்வு உத்தரவிட்டது.