கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை பிரார்த்தனை கூட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதை வீடியோ மூலம் உறுதிப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, மேற்கு வங்க பள்ளிகளின் பிரார்த்தனை கூட்டங்களில் தேசிய கீதமான ‘ஜன கண மன’ மட்டுமே பாடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.





