இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்தால், “புவியியல் மற்றும் வரலாற்றின் ஒரு அங்கமாக” தொடர வேண்டுமா என்பதைக் குறித்து பாகிஸ்தான் தானே முடிவு செய்ய வேண்டிய நிலை வரும் என கடுமையாக எச்சரித்தார்.

புதுடில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, “ஆப்பரேஷன் சிந்தூர்” தொடங்க காரணமான சூழ்நிலை மீண்டும் உருவானால் ராணுவம் என்ன செய்யும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த திவேதி, இதற்கான பதிலை முன்பே தெரிவித்துள்ளதாக கூறி, பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக செயல்பட வைக்குமானால், அதன் எதிர்காலம் குறித்து முடிவு செய்வது அந்த நாட்டின் பொறுப்பே என மீண்டும் வலியுறுத்தினார்.