மாலத்தீவில் கடலுக்கடியில் உள்ள குகையை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட 5 இத்தாலி நாட்டு நீச்சல் வீரர்கள் உயிரிழந்ததாக ரோமில் உள்ள இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவு தலைநகர் மாலேயிலிருந்து சுமார் 64 கி.மீ தொலைவில் உள்ள வாவூ அட்டோலில், 50–60 மீட்டர் ஆழத்தில் உள்ள குகைகளில் அவர்கள் ஆய்வு நீர்மூழ்குதல் மேற்கொண்டிருந்தனர்.
நீருக்கடியில் ஆய்வு செய்து முடித்த பின்னரும் நீண்ட நேரம் மேற்பரப்பிற்கு திரும்பாததால் அவர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் நால்வர் ஜெனோவா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூழலியல் பேராசிரியர் மோனிகா மான்டெபால்கோன், அவரது மகள் மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர்.
இதுவரை ஒரு சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிக்கு மோசமான வானிலை தடையாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். வானிலை சீரானதும் மீட்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





