மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மே 19 முதல் 2 நாள் அரசு முறை பயணமாக சீனா செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப், மே 13 முதல் 3 நாள் பயணமாக சீனாவுக்கு சென்று ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்; டிரம்புடன் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களும் சென்றிருந்தனர்.

அந்த பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பினார்.

இந்நிலையில் டிரம்பின் பயணத்தைத் தொடர்ந்து புடின் சீனா செல்ல உள்ளார். இந்த சந்திப்பில் ரஷ்யா–சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து பேசப்படுவதுடன், பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன; தொடர்ச்சியான உயர்மட்ட பயணங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.