சீனாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘அமெரிக்கா வீழ்ச்சியடைந்து வரும் நாடு’ என்ற சீன அதிபர் ஷீ ஜின்பிங் கருத்தைத் தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பயணத்தின் முதல் நாளில் ஜின்பிங் அந்த கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டதாகவும், அது “100 சதவீதம் சரி” என்றும் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறினார். ஆனால், அந்த விமர்சனம் தற்போதைய நிர்வாகத்தை நோக்கி அல்ல; முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நான்காண்டு நிர்வாகத்தால் ஏற்பட்ட சேதத்தைப் பற்றியே என அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், தாம் மீண்டும் பதவியேற்ற கடந்த 16 மாதங்களில் அமெரிக்கா “நம்பமுடியாத எழுச்சி” கண்டதாகவும், தற்போது முன்னேறிய நாடாக மாறியுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தப் பயணத்தில் பொருளாதார ஒத்துழைப்பு, தூதரக உறவுகள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.